தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மணிவிழா கொண்டாடும் ஸ்மர்ஃப் கார்ட்டூன் கதாபாத்திரம்..

உலகம் முழுவதும் குழந்தைகளைக் கவர்ந்த ஸ்மர்ஃப் (Smurfs) கதாபாத்திரம் அறிமுகமான 60-ஆம் ஆண்டு விழா பெல்ஜியத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு  வருகின்றது.

பெல்ஜியத்தைச் சேர்ந்த பீர்ரே கல்லிஃபோர்டு (Pierre Culliford) என்ற கார்ட்டூன் கலைஞர், 1958 -ஆம் ஆண்டு இந்த  ஸ்மர்ஃப் பாத்திரத்தை உருவாக்கினார்.

நீல வண்ணத்தில் உடல், குள்ளமான தோற்றம், சுறுசுறுப்பு, துடுக்குத்தனமான பேச்சு என ஸ்மர்ஃப் கதாபாத்திரத்தை பார்த்ததுமே குழந்தைகள் ஆனந்தமாகிப் போவார்கள்.

உலகம் முழுவதும் குழந்தைகள் உலகத்தை மகிழ்வித்து வரும் ஸ்மர்ஃப் பாத்திரத்துக்கு 60 வயதாவதை, அதன் பூர்விகமான பெல்ஜியம் கொண்டாடி வருகிறது.

இதற்காக  பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் ஸ்மர்ஃப்-களின் கிராமம், குகை, மலை என பிரம்மாண்டமான அரங்கம்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இங்கு குழந்தைகளை கவரும் விதமாக  பொம்மைகள் முதல் நவீன தொழில்நுட்ப முறை வரை ஸ்மர்ஃப் பாத்திரங்கள் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...