தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மது போதையில் பெனாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழில் மரணம்…

மது போதையில் பெனாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று  முன் தினம் இரவு யாழ்.நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில்  இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய பின்னர்  பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற  குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையின் நிமித்தம்  பெனாயிலை குடித்துள்ளார்.

இந்நிலையில் சக பொலிஸார்கள்  அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  அனுமதித்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி  குறித்த  பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

 

Comments
Loading...