தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனஅழுத்தம் ஏற்படும் காரணமும் – அதை தடுக்கும் முறைகளும்..

மனஅழுத்தம்… ஒருவரைக் கொஞ்சம் கொஞ்சமாக உருக்கும் கொதிகலன்.
ஒருவர் எவ்வளவு நேரம் தூங்குகிறார், எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதை வைத்தேஅவருக்கு  மனஅழுத்தம் இருக்கிறதா என்பதை  கண்டுபிடித்துவிடலாம்.
பல ஆண்டுகளாக இருக்கும் நாள்பட்ட மனஅழுத்தம், ஒருவரின் வாழ்க்கையையே சீர்குலைத்துவிடும்.
மனஅழுத்தம் அட்ரினல் சுரப்பின் அளவைக் குறைக்கிறது. இதனால், மனஅழுத்ததை நேரடியாக தாங்கும் நரம்பியல் அமைப்பான `ஹைபோதாலமிக் பிட்யூட்ரி அட்ரினல்’-ன் (Hypothalamic Pituitary Adrenal) செயல்பாடு சிதைவடைய வாய்ப்பிருக்கிறது.
அட்ரினல் சுரப்பி சிதைவடைந்தால் மனஅழுத்தம் நம் உடல் நலத்தையும் பாதிக்கிறது. நாள்பட்ட மனஅழுத்தம் உடலில் பலவிதமான நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
அட்ரினல் சுரப்பி சிதைவடையத் துவங்கியதைத் தெரிந்துகொள்ள சில அறிகுறிகள் இருக்கின்றன.
தினமும் 8 முதல் 10 மணிநேரம் வரை தூங்கினாலும் உங்களால் காலையில் எழுந்திருக்க முடியாது. மனஅழுத்தம் நிறைந்த சூழலைக் கையாள முடியாமல் சிரமப்படுவார்கள்.
மனஅழுத்தத்தினால் அதிகமாக சாப்பிடத் தொடங்குவார்கள். காலை நேரத்தை விட மாலை நேரத்தில் அதிக எனர்ஜியுடன் செயல்படுவாரகள்.

பாதிப்பு

பல ஆண்டுகளாக தொடர்ந்து மனஅழுத்தம் இருந்தால், மனஅழுத்தம் ஹார்மோன் மற்றும் நியுரோ டிரான்ஸ்மீட்டரின் ஆற்றலை குறைக்கும்.

குறைவான ஆற்றலால் உடலின் செல்லூலார் அமைப்பின் செயல்பாடுகள் குறையும். இதனால், அன்றாட வேலைகளில் கூட ஆர்வமில்லாமல் செயல்படுவார்கள். மகிழ்ச்சியின் அளவீடுகள் மாறத் தொடங்கும், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் ஆற்றலும் குறையத் தொடங்கும்.

தொடர்ச்சியான மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு அட்ரினல் சுரப்பி, மனஅழுத்தத்தை எதிர்கொள்ளும் இயற்கையான முன்னெச்சரிக்கை அமைப்பான கார்டிசல் (Cortisol) பாதிப்படையும். இரவில் ஆழ்ந்த தூக்கம் என்பது இல்லாமல் போகும். பின்னிரவில் எழுந்து சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு அதிகமாகும்.

இதே நிலை தொடருமானால் உடலின் ஹார்மோன் அமைப்பு முழுவதும் சிதைவடையத் துவங்கும்.

தீர்வு….

மனம், உடல் நலமுடன் இருக்க, மனஅழுத்தத்திற்கு ஆளாக்கும் நபர்களையும், சூழ்நிலைகளையும் கண்டுபிடித்து அவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது. மகிழ்ச்சி தரும் செயல்களில் கவனம் செலுத்தலாம்.

உணவுமுறைகளை மாற்ற வேண்டும், தினமும் 8 மணிநேரம் தூங்க வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கைமுறைக்கு மாறினால்தான்  அட்ரினல் சுரப்பி மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்பும்.

பல ஆண்டுகளாக மனஅழுத்தத்தில் இருந்தால், மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும். அப்போது, அட்ரினல் சுரப்பியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

ஒரு நல்ல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்று, மனஅழுத்தத்தை வென்று மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடங்கலாம்.
Comments
Loading...