தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனிதனின் இதயத்துடிப்பை கண்டறியும் சீரிஸ்-4 கைக்கடிகாரம், இந்தியாவில் கிடைப்பதில் சிக்கல்…

மனிதனின் இதயத்துடிப்பை கண்டறியும் நவீன தொழில்நுட்ப வசதியுடன், ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சீரிஸ்-4 கைக்கடிகாரம், இந்தியாவில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான தனது புதிய மாடல் ஐபோன்கள் மற்றும் கைக்கடிகாரங்களை இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்திருந்தது.

இதில், சீரிஸ் 4 என்ற கைக்கடிகாரத்தில், மனிதனின் இதயத்துடிப்பை அறிந்து கொள்ளும் இ.சி.ஜி. எனப்படும் எலக்ட்ரோ கார்டியாயோ கிராஃபி தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த , இ.சி.ஜி. சேவையை பெறவேண்டும் என்றால், அதற்கான பிரத்யேக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யவேண்டும்

அவ்வாறு, இ.சி.ஜி. வசதி கிடைக்கப்பெறும் பட்சத்தில், மனிதனின் இதயத்துடிப்பை துல்லியமாக அறிய முடியும். அதோடு , இதயத்துடிப்பின் சீரான வேகம் மற்றும் பின்னடைவு குறித்து தெளிவான தகவலையும்  பெறமுடியும்.

இந்த சீரிஸ்-4 கைக்கடிகாரத்தில் உள்ள இ.சி.ஜி. வசதியின் மூலம், இதயத்துடிப்பின் செயல்பாட்டை 30 நொடிக்குள் கண்டறியலாம். தொடக்க விலை 28 ஆயிரத்து 686 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைக்கடிகாரத்தின் முன்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ள  நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உட்பட 16 நாடுகளில் எதிர்வரும்  21-ம் தேதி  குறித்த கடிகாரம் கிடைக்கும்.

ஆனால், இந்தியாவில், சீரிஸ்-4 கைக்கடிகாரம் கிடைக்கப்பெற்றாலும், அதன் சிறப்பு அம்சமாக பார்க்கப்படும் இ.சி.ஜி. வசதியை பெறுவதில் சிக்கல் நிலவுகிறது.

அதாவது இ.சி.ஜி. வசதியுடன் சீரிஸ்-4 கைக்கடிகாரத்தில் இந்தியாவில் விற்பனை செய்யவேண்டும் என்றால், முதலில் மத்திய அரசிடம் அனுமதிபெற வேண்டும்.

இந்த தொழில்நுட்பம், கைக்கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் நம்பகத்தன்மை ஆராயப்பட்டு, தடையில்லா சான்று பெறுவது அவசியம். இதுபோன்ற சிக்கல்கள் உள்ளதால், இந்தியாவில் முதல் கட்டமாக இ.சி.ஜி. வசதியுடன் சீரிஸ்-4 கைக்கடிகாரம் கிடைப்பது அரிதாகும்.

இதேவேளை இ.சி.ஜி. எனப்படும் இதயத்துடிப்பை அறியும் வசதியுடன் கூடிய குறித்த  கைக்கடிகாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...