தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனுசங்கடா – விமர்சனம்…

நாயகன் ராஜீவ் ஆனந்தின் தந்தை இறந்ததாக அவருக்கு தகவல் வருகிறது. தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய கிராமத்துக்கு வருகிறார். ஊரில் இருக்கும் சாதிவெறி மக்கள் பொதுப்பாதையில் பிணத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆதிக்க சாதிக்கு ஆதரவாக செயல்பட, பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் கோர்ட்டை நாடுகிறார். கோர்ட்டு உத்தரவிட்டும் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை.
கடைசியில், ராஜீவ்வுக்கு நியாயம் கிடைத்ததா? ராஜீவின் போராட்டம் வென்றதா? அதன் பின்னணியில் நடந்த கொடுமைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக தெரியாமல் ஒரு கதாபாத்திரமாகவே ராஜீவ் ஆனந்த் தெரிகிறார். மணிமேகலை, சசிகுமார், ஷீலா, விதூர், ஆனந்த் சம்பத் என படத்தில் நடித்துள்ள அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் அனைவரும் அந்த ஊர் மக்களாகவே தெரிவது யதார்த்தமாக இருக்கிறது.
செய்திகளில் அடிக்கடி தென்படும் ஒரு உண்மை சம்பவத்தை இயல்பு மாறாமல் படமாக்கி இருக்கிறார் அம்சன். குறைந்த செலவில் அழுத்தமான படைப்பு.
அரவிந்த் சங்கர் இசையும், பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
Comments
Loading...