தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனைவியை பயமுறுத்த சவப்பெட்டியை கொள்வனவு செய்த குடிமகன்!

தன்மனைவி மீதுள்ள கோபத்தில் சவப்பெட்டியை வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டுள்ளார் ஒருவர்.இதனைக் கேட்ட மலர்ச்­சாலை முகா­மை­யா­ளர் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளார். வெறும் சவப்­பெட்­டி­களை வீடு­க­ளுக்கு அனுப்பி வைக்க முடி­யாது. நீங்­கள் தற்­கொலை செய்து கொள்­ளப் போகின்­றீர்­களா?, என்று முகா­மை­யா­ளர் வின­வி­யுள்­ளார்.

இல்லை, எனது மனை­வியை அச்­சு­றுத்­தவே இந்த பெட்­டியை கொள்­வ­னவு செய்­கின்­றேன், வீட்­டில் எனது அறை­யில் இந்­தப் பெட்­டியை வைத்­துக் கொள்­ளப் போகின்­றேன், எனக்­கூறி மலர்ச்­சா­லையை விட்டு வெளி­யே­றிச் சென்­றுள்­ளார்.

சவப்­பெட்டி வீட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. மறு­நாள் காலை மலர்ச்­சா­லைக்கு சென்று முற்­ப­ணத்தை மீளப் பெற்­றுக் கொண்­டுள்­ளார். குடி­போ­தை­யில் மனை­வியை அச்­சு­றுத்த இவ்­வாறு சவப்­பெட்­டி­யைக் கொள்­வ­னவு செய்ய முயற்­சித்­துள்­ளார் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

Comments
Loading...