தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்­னார் வளை­குடா கடற் பகு­தி­யில் இறந்த நிலை­யில் இராட்­சத டொல்­பின்…

மன்­னார் வளை­குடா கடற் பகு­தி­யில் இறந்த நிலை­யில் இராட்­சத டொல்­பின் நேற்று முன்­தி­ன­ம் கரை­ ஒதுங்­கி­ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்­கோடி அருகே முகுந்தராயர் சத்­தி­ரம் கடற் பகு­தி­யில் அரி­ய­வகை இனத்­தைச் சேர்ந்த டொல்­பின் மீன் இனமே கண் பகு­தி­யில் காயம் அடைந்த நிலை­யில் இவ்வாறு  கரை­ஒதுங்­கி­யுள்­ளதாகவும் கூறப்பட்டுள்ளது..

இதனை அவ­தா­னித்த அந்­தப் பகுதி மீன­வர்­கள் வனத்­துறை அதி­கா­ரி­க­ளுக்குத் தக­வல் கொடுத்­துள்ளனர்.

டொல்­பின் சுமார் 50 கிலோ­கி­ராம் எடை­யும் 5 அடி நீளம் கொண்ட 9 வய­து­டை­யது என்று துறை சார்ந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதனை அடுத்து  டொல்­பினை கால் நடை மருத்­து­வர் மூலம் உடற்­கூற்­றுப் பரி­சோ­தனை செய்த பின் அதிகாரிகள் மண­லில் புதைத்­துள்ளனர்.

இதேவேளை இந்த வகை மீன் இனங்­கள் ஆழ் கட­லில் வசிப்­பவை என்றும், விசைப்­ப­ட­கு­கள் மற்­றும் பெரிய கப்­பல்­க­ளில் அடிப்­பட்டு இறந்­தி­ருக்­க­லாம் அல்­லது கட­லில் வீசி எறி­யப்­ப­டும், பிளாஸ்­டிக் வலை­களை சாப்­பிட்டு சாவடைந்து இருக்­க­லாம் என  மீன­வர்­கள் தெரி­வித்­துள்ளனர்.

இதேவேளை குறித்த டொல்பின்களை  வேட்­டை­யா­டி­னால் 3 தொடக்­கம் 9 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை வழங்­கப்­ப­டும் என  துறை­சார்ந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டக்­தக்­கது.

Comments
Loading...