தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…

மன அழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும். குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து நீண்ட கால மன அழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான்

இந்த மன அழுத்தம் தற்காலிக சோர்வு முதல் நிரந்தர மூளைக்கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆபத்தானவை. நம் மனதும், மூளையும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய மன அழுத்தத்தை நீங்களே குறைக்க பல எளிய வழிகள் உள்ளன. அவற்றில் சில,

தியானம்

இது மிகவும் பயன்தர கூடிய ஒரு வழி. தினமும் இதற்கென சிறிது நேரம் ஒதுக்கி தியானம் செய்வது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

அதற்காக பயிற்சி வகுப்புகளுக்குத்தான் செல்ல வேண்டுமென அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடி ” நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என மனப்பூர்வமாக உணர்ந்து சொல்லுங்கள்.

இது உங்களின் அன்றைய நாளின் போக்கையே மாற்றிவிடும். நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என நம்முடைய எண்ணங்கள்தான் முடிவு செய்யும்

ஆழமாக மூச்சு விடுதல்

ஒரு அழுத்தமான சூழ்நிலையை எதிர்கொள்ள போகிறோம் என நீங்கள் உணர்ந்தால் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு உங்கள் சுவாசித்தலில் கவனம் செலுத்துங்கள். நேராக உட்கார்ந்து, கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

ஆழமாக மூச்சு விடுவது இதய துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தெளிந்த மனநிலையுடன் இருக்கும்போது எந்த சூழ்நிலையையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.

வெளியே செல்லுங்கள்

மன அழுத்தம் அதிகரிக்கும் போது சோர்வடையாமல் சிறிது நேரம் வெளியே செல்லுங்கள். நொடிக்கு நொடி மாறும் காட்சிகளும், சுத்தமான காற்றும் உங்கள் மனநிலையை மாற்றி புத்துணர்ச்சியாய் உணரச்செய்யும்.

உரையாடல்

மன அழுத்தம் அதிகரிக்கும் போது உங்களுக்கு தேவை அதனை குறைக்க ஒரு வடிகால் மட்டும்தான். அது உங்களுக்கு பிடித்தவரை தவிர வேறு யாராக இருக்க முடியும்.

எனவே அவர் உங்கள் அருகில் இருப்பவராய் இருந்தால் நேரில் சென்று பேசுங்கள் அது முடியவில்லை எனில் தொலைபேசியிலாவது பேசுங்கள். இதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது.

சிரித்தல்

நீங்கள் படங்களில் பார்த்திருப்பீர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிலர் சிரிப்பார்கள். ஆனால் உண்மையில் அது பலன் தரக்கூடிய ஒன்றுதான். சிரிக்கும்போது அது மன அழுத்தத்தை தரும் கார்டிசோல் எனும் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது

மேலும் நம் மனநிலையை மாற்றக்கூடிய எண்டோர்பின்ஸ் எனப்படும் மூளை இரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே முடிந்த வரை சிரிக்க முயலுங்கள். மன அழுத்தத்தை புன்னகையால் தோற்கடியுங்கள்.

Comments
Loading...