தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசுப்  பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள்..

இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசுப்  பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இதற்காக   79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக,  இலங்கை  நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜை ஒருவர் உட்பட 102 விண்ணப்பங்கள்  அலுகோசு பதவிக்காக கிடைத்துள்ளதாகவும்  நேர்முகப் பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில்  போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது

Comments
Loading...