தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…

மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை பயனுள்ளவை.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம்.
அதனால் தான் நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதாணி இலையை அரைத்து பற்று போட்டார்கள். 
நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது.
மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி விளங்குகிறது.
நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள்  குணமாகும்.
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதாணி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து,
அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும்,  உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.
மருதாணி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.
மருதாணியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும்.
மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மருதாணியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை  சீராக்க உதவும்.
Comments
Loading...