தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மறைக்கப்பட்ட தமிழரின் வரலாறு…2ம் பகுதி

இலங்கையில ‘மகாவம்சம்’, மகாவிகாரை துறவியான மகாநாமாவால் எழுதப்பட்ட மகாவம்சம் புத்தரின் மறைவுக்குப் பின்  1000 ஆண்டுகளுக்கு பிறகு உருவானது .
இன்று சிங்களவர்கள் தேரவாடா  புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும்  அவர்கள்  மகாவம்சம் புத்த மதத்தையே பின்பற்றி வருகின்றனர்.  தாய்லாந்து, கம்போடியா மற்றும் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேரவாடா  புத்தமதத்திலிருந்து  இந்த மகாவம்சம் வேறுபடுகிறது.
 கி.மு 2 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு அசோக சக்கரவர்த்தியினால் அனுப்பட்ட மகிந்தாவால்  தமிழ் மன்னனான தேவநம்பியதீசனை பௌத்த மததிற்கு மாற்றும் வரை இலங்கையில் பௌத்தம் என்ற மதம்ஒன்று இல்லை என்பதே உண்மை.
இலங்கையில் புத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசன் என்பது
யாவரும் அறிந்ததே.
இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் யாவரும்  சைவ மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) .
மகாநாகன் என்பவன்  தேவநம்பியதீசனின்
உடன்பிறப்பு . மகாநாகன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன்.
மகாநாகனே தேவநம்பிய தீசனின் பின் ஆட்சிக் கட்டில் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவன் தேவநம்பிய தீசனின் மகனைக் கொல்லச் சதிசெய்தான் என சந்தேகத் உள்ளானதால் அவன் தனது மனைவி அனுலா தேவியோடு உருகுணவுக்குத் தப்பியோடி அங்கு ஒரு அரசை அமைத்துக் கொண்டான். அவனுக்குப் பின் அவனது மகன் யாதல தீசன் ஆட்சிக்கு வந்தான். யாதல தீசனை அடுத்து அவனது மகன் கோத்தபாயவும் அதன் பின்னர் அவனது மகன் காகவண்ண தீசன் (மகாவம்சம் இவனது பெயரை காவன் திச என மாற்றிவிட்டது) ஆட்சி பீடம் ஏறினான். இவன் களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவியை மணம் செய்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளே துட்ட கைமுனுவும் சாத்த தீசனும் ஆவர். தந்தை சொல் தட்டியதன் காரணமாகவே ‘துட்ட’ என்ற அடை மொழி சேர்க்கப்பட்டது.
எனவே மகாவம்சத்தின் கதைநாயகனான துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய்வழியிலும் தமிழ்  இனத்தைச் சேர்ந்தவன் . எனவே அவனும் எல்லாளனும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். எல்லாளன் சைவ சமயத்தவன் துட்ட கைமுனு புத்த சமயத்தை தழுவியவன்
தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் “புன்னெறி” (பிழையான நம்பிக்கை ) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது எல்லாளன் – கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக துட்ட கைமுனு நடாத்திய புனிதயுத்தம் எனக் காட்ட மகாவம்சம் முயன்றுள்ளது.
துட்ட கைமுனு – எல்லாளன் போர் சிங்கள – தமிழ் அரசனுக்கு இடையிலான போரல்ல. பௌத்த தமிழ்  அரசனுக்கும் சைவ எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த போர். இரண்டு அரசர்கள் பக்கம் சைவ தமிழர்கள் மற்றும் பௌத்த  தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
சிங்களவர் என்ற இனமோ, சிங்களம் என்ற மொழியோ  8 ஆம் நூற்றாண்டுவரை உருவாகவில்லை. தென்னிந்திய  ஆந்திரா சேர்ந்த பௌத்த  தேரர்களே இலங்கையின் பூர்வீக குடிமக்கள் பேசிய எலு மொழியோடு பாலி, தமிழ், சமற்கிருதத்தைக் கலந்து சிங்கள மொழியை உருவாக்கினார்கள் என்பதே உண்மை
Comments
Loading...