மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும்! சவால் விடுக்கும் தமிழன்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் என கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

தான் சிறு வயது முதல் லசித் மலிங்கவின் பந்து வீச்சினை பார்த்து தான் பந்து வீசி பழகி வந்ததாகவும், தற்போது அவரின் வேகத்திற்கு தன்னால் பந்து வீச முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தான் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் என்றாலும் வறுமையின் நிமிர்த்தம் திறமையை உலகறிய செய்ய முடியாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

விஜயராஜின் திறமையினை அறிந்து கொண்ட வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவருக்கு தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.

இந்நிலையில், விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா தெரிவித்துள்ளார்.

You might also like More from author

Loading...