தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மலையகத்திலில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் கிளிநொச்சியில் அமைச்சர் திகாம்பரம் …

 

அமைச்சர் திகாம்பரம் இன்றுவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக கிளிநாச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு மலையகத்திலில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் அமைச்சர் திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகியோர்  கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர்

கிளிநாச்சி மாவட்ட செயலகத்திற்கு சென்ற  அமைச்சர் மற்றும் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகியோரை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்றார்.

 தொடர்ந்து அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற வெள்ளம் அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடலிலும் கலந்து இவர்கள் கிளிநாச்சி மலையாளபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிறகு மலையகத்திலிருந்து கொண்டுவரப்டடிருந்த இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியாக நிவாரணப்பொருட்களையும் வழங்கி வைத்தனர்

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்

Comments
Loading...