தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மழை நீருக்குள் ஒழிந்திருக்கும் அதிசயம் தெரியுமா?..

நாம்ம விளையாட்டுத்தனமாக நினைக்கும்  மழை நீரில்தான் பல அழகு குறிப்புகள் மறைந்துள்ளது.

பொலிவான முகம்

பொலிவான முகம் பெற வேண்டுமென்றால்,அதற்கு சிறந்த பியூட்டி டிப் : மழை நீருடன் கற்றாழையை சேர்த்து முகத்தில் பூசுவதே.

அதற்கு கற்றாழை ஜெல்லை 1 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, அத்தோடு ஆரஞ்ஜ் சாற்றை 5 முதல் 10 சொட்டு சேர்த்து நன்கு கலக்கவும். 10 நிமிடம் கழித்து அதில் மழை நீரை சேர்க்கவும்.

இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் பண்ணவும். பிறகு இதனை 20 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும். கடைசியாக காட்டன் துணியில் துடைத்துவிடவும்.

இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வர சொர சொரப்பாக இருந்த முகம் மிகவும் பொலிவுடனும், அழகாகவும் மாறும்.

வெண்மையான சருமத்திற்கு

பலருக்கு வெண்மையான சருமம் இருக்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்க கூடும். இந்த கனவையும் நிறைவேற்றுகிறது மழை நீர்.

1/2 கப் பப்பாளியை எடுத்து அதனை நன்றாக மிக்சியில் அரைத்து கொண்டு ,பின்பு அதனோடு 1/2 கப் வாழைப்பழத்தையும் சேர்த்துஅரைத்து கொள்ளவும்.

அவற்றை நன்கு மிக்ஸ் செய்த பின்னர் சிறிதளவு மழை நீரையும் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும்.

இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் மிக வெண்மையாக பளிச்சென்று இருக்கும்.

Comments
Loading...