தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மஹிந்த ராஜபக்க்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் – சபாநாயகர் அறிவிப்பு…

மஹிந்த ராஜபக்க்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளதாக  பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின்   முதலாவது நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று கூடியபோதே   அவர்  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை  எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் ஏற்கனவே நியமித்திருந்தமை தொடர்பில்  பல்வேறு விமர்சனங்கள்  எழுந்த நிலையில் , இது குறித்து தெரிவுக்குழு அமைத்து ஆராயுமாறு கோரப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அது குறித்து ஆராய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் குறித்த தீர்மானத்தை  இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி  நாடாளுமன்றில்  வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...