தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாடல் அழகியின் உதட்டில் மூன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம்…

மாடல் அழகியின் உதடுகளில்  மூன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களைபொருத்தி ஆஸ்திரேலிய நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

சிட்னி நகரில் கடந்த  1963-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ரோஷன் டோராப் வைர விற்பனை நிலையம், ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.

இதில் மாடல் அழகி சார்லி ஆக்டேவியாவின் உதடுகளில் மூன்று கோடியே 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள 126 வைரக் கற்களை, மேக்கப் நிபுணர் கிளார் மாக் பொருத்தினார்.

இந்நிலையில் வைரத்தால் ஜொலித்த உதடுகளை படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததோடு, கின்னஸ் சாதனை புத்தகத்திலும், ரோசன் டோராப் நிறுவனம் இடம் பிடித்துள்ளது.

இதேவேளை 22.92 கேரட் எடை கொண்ட வைரங்களுடன் மின்னிய உதடுகளை பார்க்கையில் பெருமையாக இருந்தது என சார்லி ஆக்டேவியா கூறியுள்ளார்.

 

Comments
Loading...