தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாதகல் போதிமயானக் காணியிலிருந்து வெளியேறியுள்ள இராணுவத்தினர்

யாழ்ப்பாணம்  மாதகல் முதலாம் வட்டாரத்திலுள்ள போதிமயானக் காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

குறித்த மயானக் காணியின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் பல வருடங்களாக நிலைகொண்டிருந்தனர்.

இந்நிலையில் இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையைக் கோரியிருந்தனர்.

இந்நிலையிலேயே இராணுவம் கடந்தவாரம் மயானத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து மயானத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபை ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...