தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாதர் கிராம அபிவிருத்து சங்கங்களுக்கு பெரெண்டினா நிறுவனத்தால் உதவிகள் வழங்கிவைப்பு ..

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இரண்டு மாதர் கிராம அபிவிருத்தி சங்களிற்கு கணணி மற்றும் மல்ரிமீடியா உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் ஊடாக மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கோவில்குடியிருப்பு  மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு மல்ரிமீடியா தொகுதியும் கள்ளப்பாடு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு கணனித் தொகுதியும் அன்பளிப்பு செய்யப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில்   முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மாலினி பாஸ்கரன் அவர்களது தலைமையில் இன்று (12 ) காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் பெரெண்டினா நிறுவன முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் சி சிவஞானசேகரன் புதுக்குடியிருப்பு பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா மதுரா ஒட்டுசுட்டான் பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சூ வக்சினி கரைதுறைப்பற்று பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வியயகுமாரி இளங்கோ மாந்தைகிழக்கு பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆ நியிதா மற்றும் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Comments
Loading...