தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் முல்லைவிடியல்-3 தொழில் மற்றும் உயர்கல்விச் சந்தைக்கான வழிகாட்டல் கருத்தமர்வு .

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் பெரண்டினா நிறுவனம் இணைந்து நடாத்தும் முல்லைவிடியல்-3 தொழில் மற்றும் உயர்கல்விச் சந்தைக்கான வழிகாட்டல் கருத்தமர்வு நேற்றைய தினம்(13) மாந்தை கிழக்கு  பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் சந்தையில் காணப்படும் தொழில் மற்றும் உயர் கல்விவாய்ப்புகள் ,அதற்கு அவர்களை தயார்படுத்திக் கொள்ளும் விதம் தொடர்பான தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் வளவாளர்களாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கைத்தொழிற்றுறை திணைக்கள மாவட்ட அலுவலர் திரு.செ. சன்ஜீவன், பெரண்டினா தொழில் வளநிலையத்தின் மாவட்ட முகாமையாளர் திரு.கு.தினேஸ் சந்ரு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொழில் வாய்ப்புக்கான நேர்முகதேர்வுகள் 16.06.2018 அன்று காலை 09.00 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாகும். இந்நிகழ்வுக்கான ஊடகஅனுசரணையை டான் தொலைக்காட்சி மற்றும்  capitel Fm வானொலி ஆகியன வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...