தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாமனிதர் யோசப் பரராஜசிங்கம்- மீள்பார்வை…

இலங்கை, மட்டக்களப்பு பகுதியின் முக்கிய தமிழ் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் யோசப் பரராஜசிங்கம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர் என்றால்  அது மிகையல்ல.

தன் இனத்திற்காக தன்னுயிரையும் தியாகம் செய்த தலைவர்களில் ஒருவரான ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இனப்பற்றை போற்றும் வகையில், நம் தேசிய  தலைவர் பிரபாகரனினால் மாமனிதர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார் யோசப் பரராஜசிங்கம் .

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் 1934ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி பிறந்தவர்.

ஆரம்பத்தில் ஒரு ஊடகவியலாளராக இருந்த அவர் 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியின் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

அதோடு , மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதனுடைய தலைவராகவும் செயற்பட்டு வந்தார் மாமனிதர் யோசப் பரராஜசிங்கம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையியிலேயே அவருடைய ஆக்கங்கள் ஒவ்வொன்றும் இருந்தது.

இலங்கை அரசின் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆரம்பத்தில் தந்தை செல்வா அவர்கள் அறவழி போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

எனினும்,  அறவழி போராட்டம் கை கொடுக்காத நிலையில் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்ட நிலையில், தந்தை செல்வாவின் வழியில் நின்று போராடிய ஒருவராக இருந்தார் ஜோசப் பரராஜசிங்கம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்களில் ஜோசப் பரராஜசிங்கமும் ஒருவர்.

இந்நிலையில்   ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அன்றைய ஆட்சிப்பீடத்தில் இருந்தவர்களுக்கு உடனடித் தேவையாக இருந்தது.

இதன் காரணமாக   ஜோசப் பரராஜசிங்கங்கத்தின் கதையை முடிப்பதற்கு பல கோண்களில் வழிவகையை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள்  தேவாலயத்திற்குள்ளேயே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவரின் குரல் ஆயுதத்தால் அடக்கப்பட்டமை தமிழினத்தை வேதனைகுள்ளாக்கியதை யாராலும் மறக்க முடியாது.

Comments
Loading...