தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் யுவனின் இசையில் வெளியாகியுள்ள கழுகு-2வின் பாடல்..

மலை பிரதேசங்களில் எடுக்கப்பட்ட படம் ‘கழுகு’.  .இந்த படம்   கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது.

படத்தில் பிந்து மாதவி ,தம்பி ராமையா முதலிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்தார்.

இந்நிலையில் மீண்டும்’ கழுகு பார்ட் -2 ‘ தயாரித்துள்ளனர்.  படத்தை மீண்டும் சத்யா சிவா இயக்கியுள்ளார்.  படத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா முதலிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

புதிதாக இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் ,காளி வெங்கட் நடிக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் படத்தை தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர்.

தணிக்கைக்குழு    ‘கழுகு -2 ‘  ற்கு ‘ யு சான்று ‘ வழங்கியுள்ளது.

படத்தில் ரவுடிபேபி பாடலின் வெற்றியை தொடர்ந்து யுவனின் இசையில் கழுகு-2வின் சகலகலாவள்ளி பாடல் இன்று வெளியாகியுள்ளது.

Comments
Loading...