தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்…

பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.

இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இதுவரை இந்த பணிக்கு ரஷிய நாட்டு தயாரிப்பான ‘ஸ்பேஸ் கேப்ஸ்யூல்’ எனப்படும் விண்வெளி ஓடம் மூலம்தான் இந்த போக்குவரத்து நடைபெற்று வந்தது.

விண்வெளி ஓடங்களை அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ளது.

நாசா விண்வெளி மையத்தில் இருந்து செல்ல இருக்கும் இந்த குழுவினருக்கான ‘டிராகன் கேப்ஸ்யூல்’  மற்றும் போயிங் சி.எஸ்.டி.-100 ஸ்டார்லைனர்’  என இரண்டு வகையான விண்வெளி ஓடங்களை (ஸ்பேஸ்கிராப்ட்) வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு திட்டத்தில் தனியார் நிறுவனம் கைகோர்த்துள்ளது இதுதான் முதன்முறை என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டில் சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு இந்த ஓடங்கள் செல்லும்  என்றும், இந்த முதல் பயணத்தில் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...