தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவரது சடலத்தை பொறுப்பேற்று தமிழகம் அனுப்பி வைக்கும் முயற்சியில் இந்திய துணைதூதரகம்….

இலங்கை கடற்படையினரின்  தாக்குதலில் இந்திய மீனவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முழு அளவில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
 உயிரிழந்த மீனவரின் சடலம் யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு எதிர்பார்த்திருப்பதாக தெரியவருகின்றது.
 அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில்  ஒருவர் உயிரிழந்தமையினால் ,
அவருடன்  ஏனைய மீனவர்கள் 8 பேர்  கடற்படை முகாமிலேயே தங்க வைக்கப்பட்டு பின்னர்  பொலிஸாரிடம்  கையளிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சமயம் ஒரு படகு முழுமையாக சேதமடைந்து நீரில் மூழ்கியதால்,   அதிலிருந்த   மீனவர்கள் 9  பேரும்  கடலில் வீழ்ந்த நிலையில் 8பேர் மட்டுமே கடற்படைநினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
அதில் மாரிசாமி (வயது 57 ) எனும் மீனவர் கடலில்  சடலமாக  மிதந்த நிலையில் கடற்படையினரால்  மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது..
 குறித்த மீனவர்களில்  ஒருவர் மரணமடைந்தமையால் யாழ் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினர்   எஞ்சிய மீனவர்களை   பொறுப்பேற்க மறுத்ததாக தெரியவருகின்றது.
இந்நிலையில்    உயிரிழந்த இந்திய மீனவரது சடலத்தை பொறுப்பேற்று தமிழகம் அனுப்பி வைக்க யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் முற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...