தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவு!

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்று  ஒன்பதாவது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார்கள்

இந்த நிலையில் அவர்களின் போராட்டத்திற்கு இன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் உப  தவிசாளர் க.ஜனமேயெயந்த் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள்  தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ,

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் எமது பிரதேச இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுவருவதானது எமது எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன்,

தற்போது இங்கே போராட்டத்திலீடுபட்டு வருகின்ற மீனவ சங்கத்தினரின் கோரிக்கையும் எமது கடள்வளத்தை பாதுகாக்குமாறும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்யக்கோரியுமே போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடைய கோரிக்கையின் நியாயத்தன்மைகளை விளங்காது அவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிடமுடியாது.என்றும்,

எதிர்வரும் 12.08.18அன்று மத்திய அமைச்சர் தலையையிலான பேச்சுக்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சனை தீர்க்கப்டும் என்று எதிர்பாக்கின்றோம் என்றும் மக்களின் உண்மையான போராட்டங்களுக்கு என்றும் துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளதாக எமதி பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

Comments
Loading...