தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பகுதிக்கு விஜயம் செய்த ஜப்பான் குழுவினர. கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன், அங்குள் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, வேம்பொடுகேணி, கிளாலி ஆகிய பகுதிகளில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவான சார்ப் அமைப்பின் ஊடாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...