தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முதல்வர் வேடத்தில் சூப்பர் ஸ்டார்….

சூப்பர் ஸ்டார் ரஜினி  நடித்த’ பேட்ட ‘படம் நாளை  திரைக்கு வர உள்ளது. இதனை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

பேட்ட படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘ நாற்காலி ‘என்னும் படத்தில் நடிகவிருக்கிறார்.

இந்த படம் அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்பட இருப்பதால் ரஜினி இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் நடிக்கிறார்.

‘ நாற்காலி ‘ படத்தில் சாதாரண ஒரு மனிதன் படிப்படியாக முன்னேறி முதல்வர் பதவியை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் கதையாம்.

இந்த காரணத்தினால்  தான்  படத்திற்கு  ‘நாற்காலி ‘ என்னும் பெயரை வைக்க இருப்பதாக இயக்குநர் முருகதாஸ் கூறியிருக்கிறார்.

அதோடு நாற்காலி  படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக இருப்பதாக இயக்குநர் முருகதாஸ் கூறியுள்ளார்.

Comments
Loading...