தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டிருந்த முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்தகமகே சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரான  மகிந்­தா­னந்த அளுத்­க­மகே, நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப்

பிரி­வி­ன­ரால் நேற்­றுக் காலை கைது செய்­யப்­பட்­ட்டிருந்த நிலையில். மாலை பிணை­யில்

விடு­விக்­கப்­ட்­டார். எனினும் , பிணை நிபந்­த­னை­யைப் பூர்த்தி செய்­யா­மை­யால் அவர் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்டிருந்தார்.

மகிந்­தா­னந்த அளுத்­க­மகே அமைச்­ச­ராக இருந்த போது, 2014 ஆம் ஆண்டு 39 மில்­லி­யன் ரூபா ஊழல் இடம்­பெற்­ற­தாக அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்­பாக வாக்­கு­மூ­லம் அளிப்­ப­தற்­காக நேற்று முற்­ப­கல் நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு அவர் அழைக்­கப்­பட்­டிருந்த நிலையில் , விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

கொழும்பு உயர் நீதி­மன்­றத்­தில் தன்­னு­டைய கட­வுச்­சீட்டு இருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்ற பிணை நிபந்­த­னையை நிறை­வேற்­றாத கார­ணத்­தால் தொடர்ந்­தும் அவர்  விளக்­க­ம­றி­ய­லில்  வைக்கப்பட்டிருந்தார்.

இதை அடுத்து குறித்த பிணை நிபந்தனையை அவர்   நிறைவேற்றிய பின்னர் இன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...