தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் போராளி மீது இனந்தெரியாதோர் தாக்குதல்….

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவர்  மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
விசுவமடு கோட்ட அரசியற்துறைப்பொறுப்பாளராக பணியாற்றியிருந்த அன்பரசன்(செல்வராசா) எனும் முன்னாள்  போராளியே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த 2ம் திகதி சனிக்கிழமை  இரவு  இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது  அதனை தடுக்க முற்பட்ட அவரது  மகனும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த முன்னாள் போராளி ஒரு   கலைஞர். இவர் 1990 களில் வில்லிசை மற்றும் நாடகங்களின் மூலம் மக்களிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இருந்தவர்.
பின்னாளில் விசுவமடு கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளராகவும் பின்னர் ஊரக வளர்ச்சித்திட்டத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார். அதோடு  உளவியல் ரீதியாக பாதிப்பட்ட மக்களிற்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் உதவிதிட்டங்களை செயற்படுத்தியிருந்தவர் என்பதும் சுட்டிகாட்டத்தக்கது.
சமாதான காலப்பகுதியில் தென் இலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபொழுது அம்மக்களுக்கான உதவிதிட்டங்களை முன்நின்று செயற்படுத்தியிருந்தார்.
தற்பொழுது  இவர்   சாரதிகள் பயிற்றுநராக கடமையாற்றி வருவதுடன் சமூக சேவையாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...