தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைதீவுக்கு விஜயம் செய்த ஜநா பிரதிநிதிகளிற்கும் தமிழர் மரபுரிமைப் பேரவையினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு…

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை செயலக பிரதிநிதிகள் முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.
இனவழிப்பு போரில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான விடயங்கள் தொடர்பில் மீண்டும் இலங்கைக்கு எதிரான துரப்பு சீட்டை ஐக்கிய நாடுகள் சபை தூக்கிப்பிடித்துள்ள நிலையில் ,
ஐ.நா  மனித உரிமை செயலக பிரதிநிதிகளது வடக்கிற்கான விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்நிலையில்   முல்லைதீவு விஜயம் செய்த ஜநா குழுவினருக்கும் தமிழர் மரபுரிமைப் பேரவையினருக்கும் இடையில் முக்கிய சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது பல்வேறு பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அந்தவகையில் தற்போதைய நாட்டின் நிலைமை மற்றும் கடந்த கால இனவழிப்பு போரில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான விடயங்கள் .அதற்கான தீர்வு கிடைக்காமை தொடர்பிலும்   பேசப்பட்டதாக தமிழர் மரபுரிமைப் பேரவை  தெரிவித்துள்ளது.
குறிப்பாக தற்போதைய அரசியல் சூழலிலும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் ஊடான இனவழிப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பாகவும்  தமிழர் மரபுரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...