தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் …

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளின் வருகை அண்மைய நாட்களாக முல்லைத்தீவில்  அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில்  ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியிலும்  இலங்கையின் இயற்கையை ரசிக்க பல்வேறு நாடுகளில்  இருந்தும் சுற்றுலாப்பயணிகள்  இலங்கைக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதன் காரணமாக , அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தனது நாட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும், முல்லைத்தீவுக்கு வழமையான நாட்களை விட தற்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...