தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் தொடக்கம்..

போதைத்தடுப்பு தொடர்பான சிறிலங்கா ஜனாதிபதி செயலணியின் முன்னாயத்த கலந்துரையாடல் கூட்டம்  நேற்று  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி செயலணியின் முதன்மை அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய பொலீஸ் அதிகாரி மகிந்த குணரத்தின பிரதேச செயலாளர்கள் மற்றும்,

முப்படை அதிகாரிகள் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

போதைக்கு எதிரான பாடசாலையயின் பலம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை நாடுதழுவியரீதியில் போதைப்பொருள் தடுப்பு  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடக் நிகழ்வு முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் ஜனாதிபதி மைதிரிபாலசிறீசேன அவர்களினால் தொடங்கிவைக்கப்படவுள்ளது.

இதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் சகல  அரச திணைக்கள பிரதிநிதிகள் முதன்மை பொலீஸ் அத்தியட்சகர்கள் முப்படைஅதிகாரிகள் உள்ளிட்டவர்களுடனான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அதிகாரிகள் கலந்துரையாடி முடிவுகளை எட்டியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலையான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இரண்டாயிரம் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் தொடங்கிவைக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது

Comments
Loading...