தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளம் பகுதியில் சிறப்புற இடம்பெற்ற வயல் விழா…

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிலாங்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் கிருமி நாசினிகள் பயன்படுத்தாது ,

நாற்று நடுகை மூலம் இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்டு செய்கைபண்ணப்பட்ட வயல் நிலத்தில்நெல் அறுவடை செய்யும்  வயல் விழா  இன்று மிகச்சிறப்புற இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிலாங்குளம் விவசாய போதனாசிரியர் கி கீர்த்திகன் தலைமையில் இடம்பெற்ற இந்த வயல் விழாவில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந றஞ்சனா,

முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் உகநாதன் முல்லைத்தீவு விவசாய திணைக்கள உதவிப்பணிப்பாளர் மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளர் விவசாய போதனாசிரியர்கள் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர் .

நிகழ்வில் கிருமி நாசினிகள் பயன்படுத்தாது நாற்று நடுகை மூலம் இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்டு செய்கைபண்ணப்படும் பொழுது கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு  தெளிவுபடுத்தப்பட்டதோடு,

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள படைபபுளுவின் தாக்கம் தொடர்பிலும் விவசாயிகளுக்கு தெளிவூட்டப்பட்டது .

Comments
Loading...