தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் முன்னாள் போராளியின் மகன் காணாமல் போயுள்ளார்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவநகரினை சேர்ந்த 16 வயதுடைய மாணவனை காணவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அருமைதாஸ் மதுசன் என்ற மாணவன் முல்லைத்தீவு பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு கடந்த 27 ஆம் திகதி சென்று இரண்டு வாரங்களாக வீடு திரும்பாத நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனின்  தந்தை

முன்னாள் போராளியான குறித்த சிறுவனின்  தந்தை காணாமல் போனதை அடுத்து தாய் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது தந்தை தொடர்பில் மகனிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்,

மேலும் தனது மகன் சிலாவத்தையில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு செல்வதாக சென்றதாகவும், ஆனால் தற்போது மகனை காணவில்லை எனவும் தாயார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம் முறையிட்டுள்ளதோடு, வவுனியா மனித உரிமைகள் ஆணைகுழுவிலும் முறையிட்டுள்ளதாக சிறுவனின் தாயார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...