தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லையில் மணல் ஏற்­றும் டிப்­ப­ருக்­குள் மறைத்­துக் கொண்டு செல்­லப்­பட்ட 25 தேக்க மரக் குற்­றி­கள் பறிமுதல்..

முல்­லைத்­தீவு, முறிப்­பில் மணல் ஏற்­றும் டிப்­ப­ருக்­குள் மறைத்­துக் கொண்டு செல்­லப்­பட்ட 25 தேக்க மரக் குற்­றி­கள் நேற்றையதினம்  சிறப்­புக் குற்­றத்­த­டுப்பு, போதை ஒழிப்­புப் பிரி­வி­ன­ரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதோடு  வாக­னத்­தின் சாரதியும்  கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

முல்­லைத்­தீவு மாவட்ட உப  பொலிஸ்  பரி­சோ­த­கர் திசா­நா­யக்க தலை­மை­யி­லான குழுவே மரக்குற்றிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

டிப்­பரை மறித்­துச் சோத­னை­யிட்­ட­போது தேக்­கம் மரக் குற்­றி­கள் கடத்­தப்­பட்­டமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதாகவும், அவை யாழ்ப்­பா­ணத்­துக்­குக் கடத்­திச் செல்­லப்­ப­ட­வி­ருந்­ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் மரக்குற்றிகள் கடத்தப்பட்டமை தொடர்பில் விசா­ர­ணை­கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, சாரதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...