தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லையில் 35 வருடங்களின் பின் புனரமைக்கப்பட்ட குளம் உடைப்பெடுத்துள்ளது..

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச செலயகப்பிரிவிலுள்ள குமுழமுனை கிழக்கில் அமைந்துள்ள நித்தகைக்குளமே இன்று காலை உடைப்பெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 35 வருடங்களுக்கு பின்னர் இந்த வருடம் புனரமைப்புச் செய்யப்பட்ட குறித்த குளமே கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உடைப்புக்குள்ளாகி இருக்கின்றது.

குளத்தில் 13அடி தண்ணீர் கொள்ளளவு செய்யக்கூடியதாக இருந்துள்ளதெனினும், தொடர்ச்சியாக அங்கு பெய்து வரும் கடும்மழை காரணமாக  குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குளத்தை அண்டிய விவசாய வயல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயிகளின் உடமைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக  குளத்தை அண்டிய கிராமங்களிலுள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமருமாறு  அறிவுறுத்தல்  விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாயாற்று கடற்பரப்பின் நீர்மட்டம் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...