தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்த தடயங்களை பார்வையிட்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்!

உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் முள்ளிவாய்க்கால் சென்றுள்ளார். இவர் இன்று காலை முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்று, அங்கு காணப்படும் இறுதி யுத்த தடயங்களை பார்வையிட்டுள்ளார். பப்லோ டி கிரிப் முள்ளிவாய்க்காலில் கிழக்கு சின்னப்பர் தேவாலய வளாகத்தில் யுத்தத்தினால் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக பதிக்கப்பட்ட நினைவுக்கற்களை பார்வையிட்டுள்ளார்.

மேலும் குறித்த நினைவாலயம் தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜனிடம் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை காணாமற் போனோரின் உறவினர்கள் அவ்விடத்தில் வைத்து பப்லோ டி கிரிப்பிடம் மகஜர்களை கையளித்துள்ளனர். யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...