தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெக்சிகோவில் பாலியல் குற்றங்களுக்காக 9 ஆண்டுகளில் 152 பாதிரியார்கள் பணியிடை நீக்கம் ..

மெக்சிகோ தேவாலயம் ஒன்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக கடந்த 9 ஆண்டுகளில் 152 பாதிரியார்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாதிரியார்களை சகித்துக்கொள்ள முடியாது என போப்பாண்டவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாண்டெர்ரே (Monterrey) நகர பிஷப் ரோகெலியோ கேபரரா(Rogelio Cabrera) குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக கடந்த 9 ஆண்டுகளில் 152 பாதிரியார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர்களில் பலர்  தற்பொழுது சிறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...