தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெல்போர்ன் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஸ்டார்க் விளையாடுவாரா?

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த்தில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் 26-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மிட்செல் ஸ்டார்க் உள்ளார். இவரது குதிக்காலில் (Heel) லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அச்சுறுத்தும் வகையில் காயம் இல்லாவிடிலும், தொடர்ந்து விளையாடினால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஸ்டார்க் மெல்போர்ன் டெஸ்டில் களம் இறங்குவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.

இதேபோன்ற காயத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கம்மின்ஸ் பாதிக்கப்பட்டுள்ளார். 2011-ம் ஆண்டு தனது அறிமுக போட்டிக்குப்பிறகு சுமார் ஓராண்டு காலம் விளையாடாமல் இருந்தார்.

இவர் ஸ்டார்க் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஸ்டார்க் காயம் குறித்து கம்மின்ஸ் கூறுகையில் ‘‘மெல்போர்ன் டெஸ்டில் ஸ்டார்க் இடம்பெறுவது தேர்வாளர்கள் மற்றும் கேப்டனின் முடிவை பொறுத்தது. ஸ்டார்க் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இது ஒரு வேடிக்கையான காயம். இந்த காயம் குறித்து அதிகப்படியான வகையில் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், சரியான முறையில் வைத்தியம் பார்க்காவிடில் நீண்ட நாட்கள் தொந்தரவு கொடுத்து விளையாடாத முடியாத நிலை ஏற்பட்டுவிடும்’’ என்றார்.

இதனால் மெல்போர்ன் டெஸ்டில் ஸ்டார்க் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.

Comments
Loading...