தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மே 18 ஆம் திகதிமோட்டார் வாகனப் பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு  மோட்டார் வாகனப் பேரணியை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது

குறித்த பேரணியில்  அனைவரையும் கலந்து கொள்ளுமாறு  மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பேரணி

மே 18ஆம் திகதி காலை 7 மணிக்கு  யாழ் பல்கலைக் கழக முன்றலில் இருந்து  ஆரம்பமாகும் பேரணி ஏ-9 வீதியூடாக பரந்தனை அடைந்து ஏ-35 வீதியூடாக முற்பகல் 10.45க்கு முள்ளிவாய்க்காலை சென்று  அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மோட்டார் வண்டி இல்லாதவர்களுக்கு  பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளானர்.

மேலும் பேரணியில்  கலந்துகொள்பவர்கள் அனைவரும், கறுப்பு மேலாடை அணிந்து வருவது வரவேற்கத்தக்கது என்றும்  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...