தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைதானத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்திய தோனி…

நியுசிலாந்துக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர், மகேந்திரசிங் தோனியின் காலில் விழுந்தார்.

அப்பொழுது   அந்த ரசிகர் தன் கையில் வைத்திருந்த தேசியக் கொடியுடன் காலைத் தொட முற்படுகையில்,   தோனி தேசியக் கொடி காலில் பட்டு விடக் கூடாது என்பதற்காக அதை ரசிகரிடம் இருந்து வாங்கி விட்டார்.

அதோடு  அந்த ரசிகருக்கு அறிவுரையும் வழங்கினார்.இதை அடுத்து உற்சாக மிகுதியில் அங்கிருந்து ரசிகர் ஓட்டம் பிடித்தார்.

இந்நிலையில் மைதானத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்திய மகேந்திரசிங் தோனியின் வீடியோ வேகமாகப் பரவி வருகின்றது.

Comments
Loading...