தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைத்திரியின் கட்சி தேர்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபவெளியீட்டில் “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. தொடங்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலான “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் அந்த பாடல், சுதந்திரக் கட்சியின் நிகழ்வொன்றில் ஒலிக்கவிடப்பட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...