தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மொரிஷியஸ் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு ஆதரவு – சிங்கள ஊடகம்…

மொரிஷியஸ் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் சமூகத்திற்கு நிதி உதவி வழங்கி  வருவதாக சிங்கள ஊடகமொன்று  குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மொரிஷியஸ் தூதரகத்தின் ஊடாக இவ்வாறு புலி ஆதரவாளர்களிற்கு   நிதி உதவி வழங்கி வருவதாகவும்  குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் உயிரிழந்த விடுதலைப் புலி தலைவர்களை நினைவு கூர்வதற்காக நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கு மொரிஷியஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த சிங்கள் ஊடகம்  தெரிவித்துள்ளது.

அதோடு சுவிட்சர்லாந்துக்கான மொரிஷியஸ் தூதுவருக்கும், புலம்பெயர் விடுதலைப் புலி தலைவர் ஒருவருக்கும் இடையில் மனித உரிமைப் பேரவையில் சந்திப்பு  இடம்பெற்றதாகவும்  ஊடகம் கூறியுள்ளது.

இதேவேளை  விடுதலைப் புலித் தலைவர் பற்றிய விபரங்களும்  புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக  அந்த ஊடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...