மோடியை பின்னுக்குத் தள்ளிய ஓவியா? என்ன அதிர்ச்சியா இருக்கா??

ஓவியாவை தங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்ட இவர்கள் சில குறும்புத்தனமான விஷயங்களிலும் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு ஓவியா ரசிகர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளமான டுவிட்டரில் ஓவியா பக்தன் என்ற பெயரை கொண்ட ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அதில் பிரதமர் மோடி, நடிகை ஓவியா, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் இந்தியாவின் பிரதமராக ஓவியாவிற்கு 86 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளார். அதில் ஓவியா பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளியுள்ளார். அவருக்கு 10 சதவீதம் பேரும் ராகுல் காந்திக்கு வெறும் 4 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். இதனை பலரும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய காமெடி நடிகை ஆர்த்தியும் இந்த ஸ்கிரீன் ஷாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

You might also like More from author

Loading...