தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்பு….

யாழ் கைதடியில் நீண்டகாலமாகத் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் அழுகிய நிலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கைதடி தெற்குப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் இலட்சுமி  என்கின்ற 80 வயது மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள்ளார்

குறித்த மூதாட்டியின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள் அனைவரும் திருமணம் செய்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் மூதாட்டி  தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த மூதாட்டியின் மகள் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தனது தாயார் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, .  சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்

இந்நிலையில் குறித்த மூதாட்டி இரு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...