தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் சிஐடி என கூறி ஊடகவியலாளரை அச்சுறுத்தல்..

சி.ஜ.டி எனக் கூறி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இன்று   இடம்பெற்றுள்ளது.

இணையத்தளத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டமைக்காகவே இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜீவசங்கரி என்ற நபரே இவ்வாறு ஊடகவியலாளர் ஒருவரை  இன்று காலை  பருத்தித்துறை வீதியில் உள்ள சட்டநாதர் சிவன் கோவில் பகுதியில் வைத்து அச்சுறுத்தியுள்ளார்.

துப்பாக்கியுடன் சென்ற குறித்த  நபர் தான் வல்வெட்டித்துறை சி.ஜ.டி என்றும், ஆவா குழுவிடம் ஒரு சொல் சொன்னால் ஆவா குழுவினர் துண்டு துண்டாக வெட்டி போடுவார்கள் என்றும் அச்சுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம்   தொடர்பாக ஊடகவியலாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஓரிரு தினங்களுக்கு முன்னர் யாழ் வல்லைப் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர்  காயங்களுடன் மீட்கப்பட்டு  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

அதோடு அந்த செய்தியின் உண்மை நிலை என்னவென்றும்    பிரசுரிக்கப்பட்டிருந்தது.

குறித்த  செய்தினை நீக்குமாறு கூறியே ஊடகவியலாளரை  குறித்த நபர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...