தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரபல கல்லூரி ஆசிரியர் கைது

16 வயது பாடசாலை  மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தியமை மற்றும் சில மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள் வழங்கியதாக  யாழ். வட்டுக்கோட்டை பிரபல கல்லூரியொன்றின் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில்  பிரதேச சிறுவர் அலுவலருடன் வட்டுக்கோட்டைப் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மூன்று   மாணவிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாணவிகளின்  வாக்குமூலங்களின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதான குற்ற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில்  அவரைக் கல்லூரியிலிருந்து இடைநிறுத்துவதாக கல்லூரி அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...