தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் நல்லூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்..

 யாழ். நல்லூர் முன்றலில் இன்று  மாலை-04 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.

குறித்த போராட்டத்தினை சைவமகா சபை ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறப்பட்டுள்ளது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் சைவசமயிகள் அனைவரையும் அணிதிரண்டு எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு சைவமகா சபை அழைப்பு விடுத்துள்ளது.

இந்து விவகாரப் பிரதியமைச்சராக  இஸ்லாமியரான காதர் மஸ்தான்  நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிரப்புத் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...