தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மண்டைதீவு கிணறுகளிலும் மனித எச்சங்கள்…

யாழ் மண்டைதீவில் இரண்டு கிணறுகளிலும் மனித எச்சங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்  கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்,

இதன்போது அதற்கு பதிலளித்த  அமைச்சர் மனோ கணேசன்,  தமது அமைச்சின் கீழ் இயங்கும் காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என்றும்,

இதற்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதற்கான தகவல்களை வழங்குமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை  யாழ்மண்டைதீவில், கடந்த . 1992இல் அங்கு இராணுவத்தளபதியாக இருந்த டென்சில் கொப்பேகடுவவினால் வேலணை, மண்கும்பான்,  அல்லைப்பிட்டி பகுதிகளை சேர்ந்த 120இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, மண்டைதீவிற்கு கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவர்களின் உடல்கள் மண்டைதீவு தோமையார் தேவாலய கிணறு, செம்பாட்டு தோட்ட கிணறு ஆகியவற்றில் போடப்பட்டு, அந்த கிணறுகள் கொங்கிறீட் இடப்பட்டு மூடப்பட்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...