தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மாநகரசபை தேர்தல் முடிவுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னிலையில்?

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் யாழ். மாநகரசபை 8 ஆம் வட்டாரத்தின் முடிவுகள் வெளியாகி உள்ளன.இதில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை வெளிவராத நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ளது என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது.

கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவில் நான்கு வட்டாரங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றயது இதேவேளை, நெடுந்தீவில் உள்ள நான்கு வட்டாரங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது என்றும் குறிப்பிடப்படுகின்றது. நெடுந்தீவில் உள்ள எட்டு வட்டாரங்களில் இதுவரை நான்கு வட்டாரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.மேலும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வட்டாரத்தில் முன்னிலையாக உள்ளது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Comments
Loading...