தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மானிப்பாயில் இளைஞர்களால் வாள்வெட்டு குழு விரட்டியடிப்பு…

யாழ்.மானிப்பாய்ப் பகுதியில் வாள்களுடன் சென்ற  சிலரை இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

யாழ்.ஆனைக்கோட்டை உயரப்புலம் வீதியூடாக ஒரு மோட்டார்ச் சைக்கிளில பயணித்த மூவர்  வீதியில் நின்ற பலருக்கும் வாள்களைக் காட்டி அச்சுறுத்தியபடி சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் வாள்வெட்டுக் குழுவினரை  விரட்டிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்து தப்பிச்சென்ற வாள்வெட்டு குழுவினர்  கொக்குவில் வராகி அம்மன் கோயிலடியில் நின்றிருந்த பொலிஸாரைக் கண்டதும்  தாங்கள் கொண்டு வந்த வாள்களை  வீசிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் வாள்வெட்டுக் குழுவினரை விரட்டிசென்ற இளைஞர்கள்  குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நிலையில்,  மானிப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...